BREAKING
குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல் குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல்

ட்ரம்பின் அறிவிப்புக்குப் பிறகு எரிபொருள் விலையில் திடீர் வீழ்ச்சி

ட்ரம்பின் அறிவிப்புக்குப் பிறகு எரிபொருள் விலையில் திடீர் வீழ்ச்சி

ஆசிய சந்தைகளில் இன்று காலை வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பமானதுடன் எரிபொருளின் விலை திடீரென குறைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி Brent crude oil வகை கச்சா எண்ணெய் விலை சுமார் 8.5 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 92 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேபோல் West Texas Intermediate crude oil (WTI) வகை கச்சா எண்ணெய் விலையும் சுமார் 9 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 88.60 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றமான சூழ்நிலை காரணமாக, கடந்த 2022ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக நேற்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நேற்று (09.03.2026) கச்சா எண்ணெய் விலை சுமார் 23 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 114 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், “தற்போது நிலவும் போர் சூழ்நிலை மிக விரைவில் முடிவுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களால் திடீரென அதிகரித்திருந்த எரிபொருள் விலை ஆசிய சந்தைகளில் மீண்டும் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"