BREAKING
கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம் கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம்

ரஷ்யாவின் தொழிலாளர் பற்றாக்குறை: இலங்கை, இந்திய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்

ரஷ்யாவின் தொழிலாளர் பற்றாக்குறை: இலங்கை, இந்திய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்

ரஷ்யா தனது தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் சீனா போன்ற நாடுகளை நாடவுள்ளதாய் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி நிறுவனத்தின் தெரிவித்ததாவது, ரஷ்யா எதிர்கொள்ளும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு உக்ரைன்-ரஷ்யா போர் முக்கிய காரணமாக உள்ளது. இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் ரஷ்ய பொருளாதாரத்திற்கு 1.1 மில்லியன் தொழிலாளர்கள் கூடுதலாக தேவைப்படும் எனவும், அந்த இடைவெளியை நிரப்ப ரஷ்யாவிடம் போதுமான உள்ளூர் தொழிலாளர்கள் இல்லாத நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டுமே 240,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ரஷ்யா பணி அனுமதி வழங்கியுள்ளதைக் குறிப்பிட்டு, இது 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கப்பட்ட அதிகபட்ச அனுமதி என ப்ளூம்பெர்க் சுட்டிக்காட்டியுள்ளது.

ரஷ்ய நகர சபைகளில் வெற்றிடமாக உள்ள வேலை வாய்ப்புகளை நிரப்ப இந்தியா, இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளிலிருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய ரஷ்யா தொடங்கியுள்ளது. இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் பனி அகற்றுதல், கட்டுமானம், கிடங்குகள் மற்றும் பிற நகர்ப்புற வேலைகளில் ஈடுபடுவார்கள் எனவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரஷ்யா தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டுப் பணியாளர்களின் வரவைக் கூட்டுவதில் முக்கிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"