BREAKING
கட்சித் தீர்மானத்தை மீறி வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவு ; தமிழரசுக் கட்சிக்குள் அதிருப்தி மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விண்ணப்பம் பெண்ணை கொலை செய்து தப்பி ஓடியவரை பந்தாடிய யானை! சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு! அரச சேவையில் இருந்து விலகிய 23,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்! கட்சித் தீர்மானத்தை மீறி வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவு ; தமிழரசுக் கட்சிக்குள் அதிருப்தி மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விண்ணப்பம் பெண்ணை கொலை செய்து தப்பி ஓடியவரை பந்தாடிய யானை! சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு! அரச சேவையில் இருந்து விலகிய 23,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்!

மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு , பொலிஸ் உத்தியோகத்தர்கள் விண்ணப்பம்

மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு , பொலிஸ் உத்தியோகத்தர்கள் விண்ணப்பம்

இன்று (27) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கான வரித் தொகையைப் பொலிஸ் திணைக்களத்தின் வெகுமதி நிதியத்திலிருந்து ஈடுசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக வட்டியற்ற கடன் திட்டமொன்றை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான ஆரம்பக்கட்ட நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதால், மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த மின்சார மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் கையளிக்க முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

இது குறித்து அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில், "கீழ் நிலை உத்தியோகத்தர்கள் தொடக்கம் பொலிஸ் பரிசோதகர் வரையிலான உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டமொன்றை நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

இதற்கமைய, தமக்கு எந்த மின்சார மோட்டார் சைக்கிள் தேவை என்பதைத் தெரிவுசெய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 65,000 உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்குச் செலவாகும் வரிப் பணத்தைப் பொலிஸ் திணைக்களத்தின் வெகுமதி நிதியத்திலிருந்து செலுத்தவும், உத்தியோகத்தர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கவும் திட்டமிட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

தற்போது அதற்கான நடைமுறைகள் இடம்பெற்று வருகின்றன. மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த மோட்டார் சைக்கிள்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என நான் நம்புகிறேன்" என அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"