இலங்கை சுங்கத்திற்கும் பிரித்தானியாவின் உள்நாட்டு அரசிறை வருவாய் மற்றும் சுங்கத் திணைக்களத்திற்கும் இடையில் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தக வசதிப்படுத்தல் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் இயலளவு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பயிற்சிகள், செயலமர்வுகள், தொழில்நுட்ப ஆலோசனைகள், அறிவுப் பரிமாற்றம் மற்றும் கற்றல் விஜயங்கள் ஊடாக இலங்கை சுங்கத்தின் செயற்பாடுகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக