இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள நடுவூர் மாதா குப்பம் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையின் கன்னத்திலிருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன் நிலையில் குறித்த மாதா சிலையைப் பார்வையிடுவதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் தொடர்ந்து ஆலயத்திற்கு வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியைச் சேர்ந்த ராஜன் – சகாயமேரி தம்பதியினர் தமது வீட்டில் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மாதா சிலையை வைத்து நாள்தோறும் வழிபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், சிலையின் கன்னப் பகுதியிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிவதை அவதானித்த குடும்பத்தினர், அந்தச் சிலையை அப்பகுதியிலுள்ள மகிமை மாதா ஆலயத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தத் தகவல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவியதைத் தொடர்ந்து, நடுவூர் மாதா குப்பம் மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் ஆலயத்திற்குச் சென்று சிலையைப் பார்வையிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, ஆலயத்தின் பங்குத்தந்தை பாதிரியார் ரொசாரியா தலைமையில் சிறப்புப் பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக