தவெக எம்.எல்.ஏ கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ், பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக பெண் கலெக்டர் புகார் அளித்தால் சட்டப்படை நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ் மோகன் கூறியிருந்தார்.
இதற்கிடையில் அருள் விக்னேஷை நேரில் அழைத்து முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டித்ததாகவும் செய்திகள் வெளியானது. ஒரு பக்கம் இது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது.
இந்நிலையில் அருள் விக்னேஷ் மீது பெண் கலெக்டர் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்துள்ளதாக இன்று காலை செய்திகள் பரவியது.
இதையடுத்து அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என முக ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், மாணிக்கம் தாகூர், அண்ணாமலி உள்ளிட்ட பலரும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் பெண் கலெக்டர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தமிழக அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக