BREAKING
இன்று கார்த்திகை தீபம்; வாழ்வில் செல்வம் பெருக இவ்வாறு வழிபடுங்க! கல்முனை ,சாய்ந்தமருது நகர சபை தேர்தல்; ஆணைக்குழு அறிவிப்பு முட்டை -கோழி இறைச்சி விலைகள் அதிகரிக்காது; அரசாங்கம் நடவடிக்கை சுங்க வரிச் செலுத்தாத சொகுசு ஜீப் பறிமுதல் ஜனாதிபதி அநுரவின் 58ஆவது பிறந்த தினம் இன்று; குவியும் வாழ்த்து இன்று கார்த்திகை தீபம்; வாழ்வில் செல்வம் பெருக இவ்வாறு வழிபடுங்க! கல்முனை ,சாய்ந்தமருது நகர சபை தேர்தல்; ஆணைக்குழு அறிவிப்பு முட்டை -கோழி இறைச்சி விலைகள் அதிகரிக்காது; அரசாங்கம் நடவடிக்கை சுங்க வரிச் செலுத்தாத சொகுசு ஜீப் பறிமுதல் ஜனாதிபதி அநுரவின் 58ஆவது பிறந்த தினம் இன்று; குவியும் வாழ்த்து

இன்று கார்த்திகை தீபம்; வாழ்வில் செல்வம் பெருக இவ்வாறு வழிபடுங்க!

இன்று கார்த்திகை தீபம்; வாழ்வில் செல்வம் பெருக இவ்வாறு வழிபடுங்க!

  இன்று (24) கார்த்திகை தீபத் திருவிழா இந்துக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. ஆலயங்க்களிலும் சொக்கப்பனை எரித்து கார்திகை தீப திருவிழா மிகவும் பக்தியுடன் கொண்டாட்டப்படும். இன்று மாலை கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது (Kaarthigai Deepam) சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

 கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி திதியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம் என்பது முருகப்பெருமானின் அவதாரத் திருநாளையும் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறு தீப்பொறிகளிலிருந்து ஆறுமுகனாக அவதரித்த தினம்), இருளை நீக்கி ஒளியேற்றும் தெய்வீகத் தத்துவத்தையும் கொண்டாடும் விழாவாகும். திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட அறுபடை வீடுகளிலும், இல்லங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடப்படுகிறது.

27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 விளக்குகள் ஏற்றலாம். முடியாதவர்கள் குறைந்தபட்சம் 9 விளக்குகளாவது ஏற்றி வழிபடலாம்.

விளக்குகளில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் விளக்கேற்றுவது மங்களகரமானதாக நம்பப்படுகிறது. வடக்கு திசையில் தீபம் ஏற்றுவது செல்வ வளத்தைப் பெருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது குடும்பத்தில் மகிழ்ச்சியையும் நன்மையையும் தரும் என்பது ஐதீகம். 

இந்த நாளில் வீடுகள் தோறும் அகல் விளக்குகள் ஏற்றி இறைவனை ஜோதி வடிவில் வழிபடுவது வழக்கம். குறிப்பாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை ஏற்றுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. பாரம்பரிய நம்பிக்கையின்படி, 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 விளக்குகள் ஏற்றலாம்.

அவ்வாறு முடியாதவர்கள் குறைந்தபட்சம் 9 விளக்குகளையாவது ஏற்றலாம். வசதிக்கு ஏற்ப 21, 54, 108 என எண்ணிக்கையை அதிகரித்தும் தீபம் ஏற்றி வழிபடலாம். அகல் விளக்குகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பஞ்சுத் திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

அனைத்து விளக்குகளிலும் நெய் பயன்படுத்த முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு விளக்கிலாவது நெய் ஊற்றி ஏற்றுவது சிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது. முதலில் ஒரு விளக்கை ஏற்றி, அதன் மூலம் மற்ற விளக்குகளையும் ஏற்றுவது வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத்தன்று வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளை நோக்கி விளக்கேற்றுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

வடக்கு திசை குபேரனுக்கு உரிய திசை என்பதால், அந்தப் பகுதியில் தீபம் ஏற்றுவது செல்வ வளத்தையும் பணவரவையும் பெருக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. கிழக்கு திசையில் தீபம் ஏற்றுவது குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நன்மைகளைத் தரும் என்றும் கூறப்படுகிறது  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"