BREAKING
கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு அனோஜனைப் போன்று ஞானசார தேரரையும் விடுதலை செய்யவும் சீதனமாக கார் வரவில்லை.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய பொலிஸ் மாப்பிள்ளை! இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடல்! 5 கொலைச் சம்பவங்கள்: பிள்ளையானுக்கு தொடர் விளக்கமறியலில்! கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு அனோஜனைப் போன்று ஞானசார தேரரையும் விடுதலை செய்யவும் சீதனமாக கார் வரவில்லை.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய பொலிஸ் மாப்பிள்ளை! இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடல்! 5 கொலைச் சம்பவங்கள்: பிள்ளையானுக்கு தொடர் விளக்கமறியலில்!

இன்று நள்ளிரவு முதல் கண்டி கொழும்பு பிரதான வீதி மூடல்!

இன்று நள்ளிரவு முதல் கண்டி கொழும்பு பிரதான வீதி மூடல்!

 இன்று (23) இரவு 11 மணி முதல் நாளை (24) அதிகாலை 6 மணி வரை கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடுகண்ணாவை பகுதியில் போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கடுகண்ணாவை பகுதியில் வீதிக்கு மேலாக அமைந்துள்ள ஆபத்தான பாறைகளை அகற்றி, வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தற்காலிக போக்குவரத்துத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்போது குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடுகண்ணாவை பகுதி மலைச்சரிவுகள் மற்றும் செங்குத்தான பாறைகளைக் கொண்ட பகுதியாகும்.

மழை மற்றும் மண் அரிப்பு காரணமாகப் பாறைகள் சரிந்து வீதியில் விழும் அபாயம் காணப்படுகிறது.

இதனால் வாகனப் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். குறிப்பாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஆபத்தான பாறைகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துவதுடன், பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"