BREAKING
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு அனோஜனைப் போன்று ஞானசார தேரரையும் விடுதலை செய்யவும் சீதனமாக கார் வரவில்லை.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய பொலிஸ் மாப்பிள்ளை! இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடல்! மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு அனோஜனைப் போன்று ஞானசார தேரரையும் விடுதலை செய்யவும் சீதனமாக கார் வரவில்லை.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய பொலிஸ் மாப்பிள்ளை! இன்று நள்ளிரவு முதல் கண்டி – கொழும்பு பிரதான வீதி மூடல்!

சீதனமாக கார் வரவில்லை.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய பொலிஸ் மாப்பிள்ளை!

சீதனமாக கார் வரவில்லை.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய பொலிஸ் மாப்பிள்ளை!

இந்தியா ஹரியானா மாநிலம் சோனிபட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வில், வரதட்சணையாக ரூ.13 லட்சம் மதிப்பிலான மாருதி பிரெஸ்ஸா கார் கிடைக்காததால் டெல்லி காவல்துறையில் பணிபுரியும் மணமகன் குல்தீப் திருமணத்தை நிறுத்திவிட்டு திரும்பி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்திற்காகப் பெண் வீட்டார் ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வரை செலவு செய்திருந்தநர். அதோடு, ரூ.9.5 லட்சம் மதிப்பிலான ஹூண்டாய் ஆரா காரையும் முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், திருமணத்திற்கு முதல் நாள் பிரெஸ்ஸா கார் வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் பிடிவாதம் பிடித்ததால், குறுகிய நேரத்தில் அதை ஏற்பாடு செய்ய முடியாமல் பெண் வீட்டார் தவித்துள்ளனர்.

இன்னிலையில் திருமண நாளன்று சாதாரண உடையில் மண்டபத்திற்கு வந்த மணமகன், கார் இல்லாததை கண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பெண் வீட்டாரின் கெஞ்சலையும் மீறி திருமணத்தை ரத்து செய்துவிட்டு வெளியேறினார்.

மணக்கோலத்தில் காத்திருந்த மணமகள் ஹீனா மற்றும் அவரது குடும்பத்தினர் இதனால் பெரும் அவமானத்திற்கும் பொருளாதார இழப்புக்கும் ஆளாகியுள்ளனர். இது குறித்து பெண்ணின் தந்தை சுபாஷ் குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"