BREAKING
கிளிநொச்சியில் துர்நாற்றம்; உயிரிழந்து கரையொதுங்கிய இலட்சக்கணக்கான மீன்கள் ஓசி பயணம்; 96.22 மில்லியன் செலுத்தாத மஹிந்த; பராமரிப்பு செலவில் கைவைத்த NPP! யாழில் அனுர அரசாங்கத்தை குறை கூறிய தொல். திருமாவளவன் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;ரயிலுடன் மோதிய STF வாகனம் கிளிநொச்சியில் துர்நாற்றம்; உயிரிழந்து கரையொதுங்கிய இலட்சக்கணக்கான மீன்கள் ஓசி பயணம்; 96.22 மில்லியன் செலுத்தாத மஹிந்த; பராமரிப்பு செலவில் கைவைத்த NPP! யாழில் அனுர அரசாங்கத்தை குறை கூறிய தொல். திருமாவளவன் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;ரயிலுடன் மோதிய STF வாகனம்

ஓசி பயணம்; . மில்லியன் செலுத்தாத மஹிந்த; பராமரிப்பு செலவில் கைவைத்த !

ஓசி பயணம்; . மில்லியன் செலுத்தாத மஹிந்த; பராமரிப்பு செலவில் கைவைத்த !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில்,ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு பயண நிலுவை 96.22 மில்லியன் உள்ளதாக  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் (2014) மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு வாடகை வானூர்திப் பயணங்களுக்காக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய 96.22 மில்லியன் ரூபாய் இதுவரை செலுத்தப்படவில்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாதீட்டுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஷிரந்தி ராஜபக்ச, யோஷித ராஜபக்ச மற்றும் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்டோர் மேற்கொண்ட பயணங்களுக்கே இந்தத் தொகை நிலுவையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதில் இத்தாலிப் பயணத்துக்கு 43.47 மில்லியன் ரூபாயும், நேபாளப் பயணத்துக்கு 28.8 மில்லியன் ரூபாயும், மாலைதீவு மற்றும் சீஷெல்ஸ் பயணத்துக்கு 20.35 மில்லியன் ரூபாயும், திருப்பதி பயணத்துக்கு 3.6 மில்லியன் ரூபாயும் அடங்கும்.

இதுவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நட்டமடைய ஒரு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புச் செலவுகள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டில் இதற்காகச் செலவிடப்பட்ட 110.51 மில்லியன் ரூபாய், இவ்வாண்டு செப்டெம்பர் வரை 4.39 மில்லியன் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மஹிந்த ராஜபக்ச, சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கான செலவு தலா 0.88 மில்லியன் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஹேமா பிரேமதாசவுக்கான கொடுப்பனவு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி அலுவலகத்தின் தற்காலிக பணியாளர் குழுவுக்கான செலவு 857 மில்லியன் ரூபாயிலிருந்து 237 மில்லியன் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், சிரேஷ்ட ஆலோசகர்களின் எண்ணிக்கை 39 இலிருந்து 6 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் மீதான நிதிச்சுமையைக் குறைத்து அரசியல் கலாசாரத்தை மாற்றும் நடவடிக்கைகள் தொடரும் என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"