BREAKING
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;ரயிலுடன் மோதிய STF வாகனம் போதையில் வீதியில் சென்றவர்களிடம் தகராறு; இளம் வர்த்தகர் கைது கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய இரு கலால் அதிகாரிகள் செத்தல் மிளகாய் 2,500 ரூபாவிற்கு மேல்; ஏக்கத்தில் மக்கள்! கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு; அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைவு இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;ரயிலுடன் மோதிய STF வாகனம் போதையில் வீதியில் சென்றவர்களிடம் தகராறு; இளம் வர்த்தகர் கைது கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய இரு கலால் அதிகாரிகள் செத்தல் மிளகாய் 2,500 ரூபாவிற்கு மேல்; ஏக்கத்தில் மக்கள்! கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு; அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைவு

கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய இரு கலால் அதிகாரிகள்

கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய இரு கலால் அதிகாரிகள்

காரில் உலர்ந்த கஞ்சா தொகையைக் கொண்டு சென்றதாக , கலால் திணைக்களத்தின் இரு அதிகாரிகள் உட்பட மூவர் அம்பேகமுவ பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனமல்வில, அம்பேகமுவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைச் சோதனையிட்டதில், அதற்குள் 43 கிலோகிராம் 200 கிராம் உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனத்தில் பயணித்த கலால் திணைக்கள அதிகாரிகள், இந்தக் கஞ்சா தொகை சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், அவ்வாறானதொரு சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமைக்கான தகவல்களோ அல்லது கஞ்சா தொகையைக் கொண்டு செல்வதற்கான சட்டரீதியான அனுமதி பெறப்பட்டமைக்கான ஆதாரங்களோ கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கலால் திணைக்களத்தின் இரு அதிகாரிகள் உள்ளிட்ட மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (23) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பேகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"