BREAKING
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;ரயிலுடன் மோதிய STF வாகனம் போதையில் வீதியில் சென்றவர்களிடம் தகராறு; இளம் வர்த்தகர் கைது கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய இரு கலால் அதிகாரிகள் செத்தல் மிளகாய் 2,500 ரூபாவிற்கு மேல்; ஏக்கத்தில் மக்கள்! கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு; அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைவு இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;ரயிலுடன் மோதிய STF வாகனம் போதையில் வீதியில் சென்றவர்களிடம் தகராறு; இளம் வர்த்தகர் கைது கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய இரு கலால் அதிகாரிகள் செத்தல் மிளகாய் 2,500 ரூபாவிற்கு மேல்; ஏக்கத்தில் மக்கள்! கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு; அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைவு

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு; அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைவு

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு; அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைவு

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக, முத்துவெல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள 3 கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,000 தொன் கொள்ளளவு கொண்ட சேமிப்புத் தொட்டியிலிருந்தே இந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எண்ணெய்க் கசிவு தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) தெரிவித்துள்ளது.

எனினும், கசிந்த எண்ணெய் ஏற்கனவே வடிகால் கால்வாயில் கலந்துள்ளதுடன், கடலையும் சென்றடைந்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடற்கரைச் சூழல் மற்றும் கடல் வளங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"