கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை விமான சேவைக்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் பணமோசடி தொடர்பில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புபட்டு 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 59 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளதாக முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தற்போது கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷவை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்காக நீதிமன்றில் முன்னிலையாவதற்கு முன்னஆல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்ச அழைத்து வரப்பட்டார்.
இதனை முன்னிட்டு அவரது மனைவி லிமினி ராஜபக்சவும் இன்று (19) நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
குறித்த வழக்கு நிரந்தர முத்தரப்பு மேல் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக