2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய விண்ணப்பதாரர்கள், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் இணையவழி ஊடாகத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சை நிறைவடைந்த பின்னர் அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக