BREAKING
2026 க. பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல் தமிழர் பகுதியில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு ; விசாரணையில் வெளியான முக்கிய தகவல் மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம் ; கொல்லப்பட்ட உயிர் கப்பல் கொழும்புக்கு வந்த வேர்ல்ட் ஒடிஸி' பயணிகள் திமுக ஸ்டாலினை தோற்கடித்த தவெக எம்.எல்.ஏ காலமானார்; ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ;முதலமைச்சர் விஜய் இரங்கல் 2026 க. பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல் தமிழர் பகுதியில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு ; விசாரணையில் வெளியான முக்கிய தகவல் மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம் ; கொல்லப்பட்ட உயிர் கப்பல் கொழும்புக்கு வந்த வேர்ல்ட் ஒடிஸி' பயணிகள் திமுக ஸ்டாலினை தோற்கடித்த தவெக எம்.எல்.ஏ காலமானார்; ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ;முதலமைச்சர் விஜய் இரங்கல்

மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம் ; கொல்லப்பட்ட உயிர்

மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம் ; கொல்லப்பட்ட உயிர்

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான எறும்புத்தின்னி (Pangolin) ஒன்றை உயிரிழக்கச் செய்த சம்பவம் தொடர்பான காணொளியை பாடசாலை மாணவன் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் ஆசிரியர் ஒருவர் கண்டறிந்ததையடுத்து, மெதிரிகிரிய பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் சில காலத்திற்கு முன்னர் இடம்பெற்றிருந்த போதிலும், எறும்புத்தின்னியைக் உயிரிழக்கச் செய்யும் காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியிருந்ததாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலைக்குக் கொண்டு வந்த கையடக்கத் தொலைபேசியை ஆசிரியர் ஒருவர் பரிசோதித்தபோதே குறித்த காணொளி முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மெதிரிகிரிய காவல்துறையினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து குறித்த சம்பவம் தொடர்பில் கூட்டு விசாரணையை ஆரம்பித்தனர்.

இதன் பிரகாரம், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பல வீடுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இடங்களை அதிகாரிகள் சோதனையிட்டதுடன், இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், எறும்புத்தின்னியை உயிரிழக்கச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கண்டறிந்து கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட, அழிந்துவரும் வனவிலங்குகளின் பட்டியலில் எறும்புத்தின்னி உள்ளடக்கப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வனவிலங்குகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தியுள்ள அமைச்சு, வனவிலங்கு கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காகச் செயற்படும் பொதுமக்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"