BREAKING
Instagram Subscription மூலம் மாதம் ரூ.85 லட்சம் வருமானம் பெறும் யுவதி! மட்டக்களப்பில் இரவோடிரவாக கைதான மலேசிய பெண் ; வலது கால் முறிந்ததால் வந்த வினை ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர் பேராசிரியர் உருத்ரமூர்த்தி சேரன் காலமானார் பெண் சாரதியால் 10 மோட்டார் சைக்கிள்களுக்கு நடந்த சம்பவம் ; விசாரணைகள் தீவிரம் அதிகாலையில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; குழந்தைகளுடன் தீயில் கருகிய குடும்பம் Instagram Subscription மூலம் மாதம் ரூ.85 லட்சம் வருமானம் பெறும் யுவதி! மட்டக்களப்பில் இரவோடிரவாக கைதான மலேசிய பெண் ; வலது கால் முறிந்ததால் வந்த வினை ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர் பேராசிரியர் உருத்ரமூர்த்தி சேரன் காலமானார் பெண் சாரதியால் 10 மோட்டார் சைக்கிள்களுக்கு நடந்த சம்பவம் ; விசாரணைகள் தீவிரம் அதிகாலையில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; குழந்தைகளுடன் தீயில் கருகிய குடும்பம்

ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர் பேராசிரியர் உருத்ரமூர்த்தி சேரன் காலமானார்

ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர் பேராசிரியர் உருத்ரமூர்த்தி சேரன் காலமானார்

ஈழத்தின் நவீன கவிதையின் முன்னோடியான மகாகவி உருத்ரமூர்த்தி அவர்களின் புதல்வரும், சமகாலத் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய கவிஞர்களில் ஒருவருமான சேரன் காலமானார்.

உருத்ரமூர்த்தி சேரன் தனது 66 ஆவது வயதில் கனடாவின் டொரொன்டோ நகரில் நேற்று (18) இரவு காலமானார்.

1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், அளவெட்டியில் பிறந்த இவர், ஈழத்தின் புகழ்பெற்ற கவிஞர் மஹாகவி (து. உருத்திரமூர்த்தி) அவர்களின் மகனாவார்.

இவரது முதலாவது கவிதை 1972-ஆம் ஆண்டு வெளியானது.

எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிர இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய இவர், ஈழத்தில் ஒரு சிறந்த கவிஞராகவும் அரசியல் ஊடகவியலாளராகவும் தடம் பதித்திருந்தார்.

பின்னர் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த அவர், அங்குள்ள வின்சர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாக அமைந்துள்ளதுடன், அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் நண்பர்களுக்குப் பலரும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"