ஹோமாகம, கட்டுவான பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி, அலுவலகம் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது.
சிற்றூந்தை செலுத்திய பெண் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனினும், 10 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக