BREAKING
யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை பலியெடுத்த சம்பவம் ; மேலதிக தகவல் வெளியானது மஹா கந்த சஷ்டி ;திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பொலிஸார் குவிப்பு! சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப் வண்டி ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உயர்தர மாணவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு ; வெளியான முக்கிய தகவல் ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 : அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள் தான்! யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை பலியெடுத்த சம்பவம் ; மேலதிக தகவல் வெளியானது மஹா கந்த சஷ்டி ;திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பொலிஸார் குவிப்பு! சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப் வண்டி ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உயர்தர மாணவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு ; வெளியான முக்கிய தகவல் ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 : அதிஸ்டம் பெறும் ராசிகள் இவர்கள் தான்!

மஹா கந்த சஷ்டி ;திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பொலிஸார் குவிப்பு!

மஹா கந்த சஷ்டி ;திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பொலிஸார் குவிப்பு!

வரலாற்ரறு பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மஹா கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (15) கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கடந்த நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று யாகசாலை பூஜைகளும், தங்க ரதத்தில் சுவாமி வீதிஉலாவும் நடைபெற்று வருகின்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை 4 மணிக்கு கோயில் கடற்கரையில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கூட்ட நெரிசலை சமாளிக்கவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4,100 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் உயர் கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக மருத்துவக் குழுவினரும், தீயணைப்பு வாகனங்களும், கடற்படையினரின் மீட்புப் படகுகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"