ஜோதிடத்தில் நாயகர்களாக நவகிரகங்கள் விளங்குகின்றனர். அவற்றில் சர்ப்ப கிரகம், நிழல் கிரகம் என அழைக்கப்படக்கூடிய ராகு - கேது கிரகங்களின் பெயர்ச்சிகள் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 13ஆம் திகதி, மாலை பெயர்ச்சி ஆரம்பமானது. இந்த ராகு கேது பெயர்ச்சியின் போது, ராகு மகர ராசிக்கும், கேது கடக ராசிக்கும் பெயர்சியாக உள்ளனர்.
ராகு கேது பெயர்ச்சியானது பல நன்மைகளை தரக்கூடியதாக இருந்தாலும், பல்வேறு கெட்ட பலன்களையும் கொடுக்க வல்லது. இந்த பெயர்ச்சியால் திடீரென ஆகாயத்தில் ஏற்றி பாதாளத்தில் தள்ளக்கூடிய வல்லமை வாய்ந்தது.
மேஷ ராசி,
ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 10-ஆம் இடத்தில் வருவதால், நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் மேன்மை அடைய கூடும். உங்களுடைய வியாபாரம் பெருகும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் ஏற்றம் காண வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி மாறுதல் சம்பளம் உயரும்.
ரிஷப ராசி,
ரிஷப ராசிக்கு மூன்றில் கேது, 9ல் ராகு அமர்ந்திருக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது. 3ல் கேதுவின் சஞ்சாரம் காரணமாக உங்களுடைய சாணக்கியத்துவம் வெளிப்படும். இதனால் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய நிலையும், உங்கள் திட்டங்கள் செயல்பாடுகள் வெற்றியை தரும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் திடீர் பணவரவு, வருமானம் உயர்வு என்பன கிடைக்கும்.
மிதுன ராசி,
மிதுன ராசிக்கு தனஸ்தானமான 2ல் கேது, அஷ்டமத்தில் ராகு இருப்பதால் வெளியூர், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. பணவரவு மேம்படுவதோடு, குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். ராகு 8ல் இருக்கக்கூடிய அமைப்பானது உங்களுடைய காரியத்தில் தாமதம் ஏற்படுத்தலாம். சிரமப்பட்டாலும் வெற்றி பெறுவீர்கள். பல அதிசயங்கள் நடக்கக் கூடியதாக இருக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
கடக ராசி
இந்த பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசியில் கேதுவும், 7ம் வீட்டில் ராகுவும் சந்திரன் செய்ய உள்ளனர். இதன் காரணமாக உங்களுடைய புகழ் மற்றும் சமூகத்தில் மரியாதை உயரக்கூடியதாக இருக்கும். சப்தம ஸ்தானத்தில் ராகு இருப்பதால் உங்கள் வாழ்க்கை துணை, நெருங்கிய நண்பர்களுடன் தேவையற்ற விவாதங்கள் அல்லது பிரிவு ஏற்படக்கூடிய சூழ்நிலை. ராகுவின் அமைப்பால் சில கெட்ட நண்பர்களை பிரிந்து புதிய நண்பர்களை சேர்க்கும் வாய்ப்பு உண்டு.
சிம்ம ராசி
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பட்ட கஷ்டங்களில் இருந்து நிவாரணம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 6ல் ராகு, 12ல் கேது இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். உங்களுடைய வேலை, புதிய தொழில் விஷயங்களில் மேன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் ஆதரவும் மகிழ்ச்சியும் கிடைக்கும். . பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள்.
கன்னி ராசி,
கன்னி ராசிக்கு நன்மைகள் தரக்கூடியதாக இந்த ராகு கேது பெயர்ச்சி அமையும். ராகு உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும், பூர்வீக சொத்துக்கள், முதலீடுகள் மூலம் லாபம் என தன லாபங்களை பெறுவீர்கள்.
துலாம் ராசி,
துலாம் ராசிக்கு சுகஸ்தானமான 4ல் ராகு, 10 ல் கேது சஞ்சரிக்க உள்ளனர். இந்த பெயர்ச்சி காரணமாக தற்போது உள்ள ஊர் அல்லது வீட்டை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் யோகம் உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் காரணமாக மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற கவலைகள் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி,
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்கள் ராசிக்கு 3ம் இடமான தைரிய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். உங்களுடைய குடும்பம் மற்றும் உறவினர்களிடம் இருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கும். பலவித அதிசயமான நன்மைகள், சூழல்கள் ஏற்படும்.
தனுசு ராசி,
தனுசு ராசி அன்பர்களுக்கு தனஸ்தானத்தில் ராகுவும், 8ம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்க உள்ளனர். கூச்சம் சுபாவம், அதிகமாக பேசக்கூடிய நபர்கள், அதை கட்டுப்படுத்தி பேச்சில் இனிமையையும், தைரியத்தையும் கடைபிடித்தால் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும்
மகர ராசி,
உங்களுடைய ஜென்ம ஸ்தானத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகின்றனர். அதனால் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு உங்களுடைய வேலை தொடர்பாக இடமாற்றங்கள், உங்களுடைய ஊர் மாற வாய்ப்புகள் உண்டு. 7ல் இருக்கக்கூடிய கேதுவின் அமைப்பால் உங்கள் நண்பர்களை பிரியவும், சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் போகலாம். நீங்கள் சந்தித்து வந்த ஏமாற்றங்கள் விலகும்.
கும்ப ராசி,
கும்ப ராசி அன்பர்களுக்கு, உங்களுடைய ராசியில் இருந்து ராகு விலகுவதாலும், விரய ஸ்தானத்தில் ராகு, 6ல் கேது சஞ்சரிக்க கூடிய காலத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், சமாளிப்பதற்கான தீர்வு கிடைக்கும். வஞ்சனை, சூழ்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள், புதிதாக வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மீன ராசி,
மீன ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு அமர்வதால் தன லாபம் அள்ளிக் கொடுக்கும். பணம், சொத்து தொடர்பாக இருந்த கவலைகள் விலகும். திடீரென வரக்கூடிய தன வரவால் உங்களுடைய நிதிநிலை மாறும்.பூர்விக சொத்துக்கள் மூலம் லாபம் அடைவீர்கள்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக