BREAKING
மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி இன்று இடம்பெற்ற கோர விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம் திருமண உறவுக்குள் பாலியல் அத்துமீறல் ; 36 நாடுகளில் பெண்களுக்குப் சட்டப் பாதுகாப்பு இல்லை செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்; சம்பவத்தால் பரபரப்பு மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி இன்று இடம்பெற்ற கோர விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம் திருமண உறவுக்குள் பாலியல் அத்துமீறல் ; 36 நாடுகளில் பெண்களுக்குப் சட்டப் பாதுகாப்பு இல்லை செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்; சம்பவத்தால் பரபரப்பு

இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர்

இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர்

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்வதற்கு வாவியில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றி மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இரவு 8.00 மணிக்கு இடம் பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கல்லடி பழைய பாலத்தில் சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (13) இரவு 8.00 மணியளவில் யுவதி ஒருவர் அவரது செருப்பு மற்றும் கை பை குடை என்பவற்றை கைவிட்டு விட்டு தற்கொலை செய்வதற்கு பாலத்தில் இருந்து வாவியில் குதித்துள்ளார்.

இதன்போது வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கண்டு உடனடியாக செயல்பட்டு வாவியில் இருந்து யுவதியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து பொலிசார் 1990 அம்புலன்ஸ் வண்டி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதித்து யுவதி உயிரை காப்பாற்றியுள்ள தாகவும் குறித்த யுவதி பிறிதொரு பிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாகவும் தற்கொலை செய்ய முற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை குறித்த பாலத்தில் இருந்து கடந்த மாதம் இளைஞர் ஒருவர் வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதுடன் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 12 ம் திகதிவரை 90 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் மாவட்ட பிரிவு புள்ளிவிபர தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது,

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"