BREAKING
இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை யாழ். செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய முன்பள்ளிப் பாலகன் ; பெற்றோர், ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணை இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை யாழ். செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய முன்பள்ளிப் பாலகன் ; பெற்றோர், ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணை

சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த வயது சிறுமி

சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த வயது சிறுமி

மத்திய அமெரிக்காவில் குவாத்தமாலாவில் கடுமையான மார்பு வலியால் மயக்கமடைந்த 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துவிட்டதாகக் குடும்பத்தினர் தவறாகக் கருதி இறுதிச்சடங்குகளுக்கு ஏற்பாடு செய்த நிலையில், சுமார் 8 மணி நேரத்திற்குப் பின்னர் அவர் சவப்பெட்டிக்குள் உயிருடன் விழித்தெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குவாத்தமாலாவின் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு திடீரெனக் கடுமையான மார்பு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது தந்தை சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.

எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சிறுமி திடீரென மயக்கமடைந்துள்ளார்.

இதன்போது, சிறுமியின் சுவாசமும் இதயத் துடிப்பும் நின்றுவிட்டதாகக் கருதிய தந்தை, அவர் உயிரிழந்துவிட்டதாகத் தவறாக முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, எந்தவொரு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படாமலும், அதிகாரப்பூர்வ மரணச் சான்றிதழ் பெறப்படாமலும் குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்காகச் சவப்பெட்டி ஒன்றையும் வாங்கி வீட்டில் இறுதிச்சடங்குகளுக்குத் தயாராகியுள்ளனர்.

இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சவப்பெட்டிக்குள் அசைவுகள் தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 8 மணி நேரத்திற்குப் பின்னர் சிறுமி சவப்பெட்டிக்குள்ளேயே கண்களைத் திறந்து நினைவுக்குத் திரும்பியுள்ளார்.

இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாகச் சிறுமியைச் சவப்பெட்டியிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிறுமி, மயக்கமடைவதற்கு முன்னர் தனக்குக் கடுமையான மார்பு வலி ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"