எகொடஉயன பொலிஸ் பிரிவில் நேற்று (11) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எகொடஉயன - மோதர வீதியில் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற ஒருவரும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 165 கிராம் 190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவைச் சேர்ந்த 25 வயதுடைய ஆணும் பாணந்துறையைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணும் ஆவர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக