BREAKING
குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல் குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல்

இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள்

இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான வெளிநாட்டு ரக சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புளூமெண்டல் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 08 ஆம் குறுக்குத் தெருப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 93,400 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 28 வயதுடைய சீனப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"