தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுத்துறை - கொழும்பு வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கொஸ்வத்த சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று எதிரே வந்த லொறி வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மில்லேவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார்.
மேலும், விபத்துடன் தொடர்புடைய லொறி வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக