BREAKING
கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம் கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம்

கொழும்பில் நடைபெற்ற இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி

கொழும்பில் நடைபெற்ற இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில், கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இன்று (12) பிற்பகல் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.

இதன்போது, கொழும்பு துறைமுக நகரம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சுற்றுலாத்துறை, தகவல் தொடர்பாடல் மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையில் புதிய பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

முதலீடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்காக வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாக முறையைப் பேணுதல், தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்குதல், அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்திலும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து திறம்படச் செயற்படக்கூடிய வலுவான வர்த்தகச் சமூகம் நாட்டுக்குத் தேவை என வலியுறுத்திய ஜனாதிபதி, இந்த நோக்கத்தை அடைவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் அழைப்பு விடுத்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"