BREAKING
கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம் கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம்

போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு!

போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு!

  இந்தியா கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சி விமான நிலையம் அருகே அதிகாலையில், மிகவும் வேகமாக சென்ற கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய நபர் 19 வயதே ஆன சுஹைல் சஜீவ் எநும் இளைஞன் போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தை எனது அப்பா பார்த்துக் கொள்வார் என அந்த இளைஞர் பேசியதாக கூறப்படும் தகவல் நெட்டிசன்களை கொதிப்படைய செய்துள்ளது. 

நேற்று முன்தினம் (10) விபத்து தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்த விபத்தில் வயநாட்டைச் சேர்ந்த 21 வயதான தேவிகா, பாலக்காட்டைச் சேர்ந்த 22 வயதான கோபிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 21 வயதான் இஜாஸ் அக்கம்பக்கத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய சுஹைல், சற்றும் மனிதாபிமானமோ அல்லது வருத்தமோ இன்றி சாலைகள் என்பது வாகனங்களை ஓட்டத்தானே? இந்த விவகாரத்தை எனது அப்பா பார்த்துக்கொள்வார்? என பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தை ஏற்படுத்திய கார் மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது. விபத்துக்கு முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மது அருந்தியிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 23 என்பதால், 19 வயது இளைஞருக்கு மதுபானம் வழங்குவது சட்டவிரோதமாகும்.

இன்னிலையில் இளைஞருக்கு மதுபானம் வழங்கியதாகக் கூறப்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள கலால் துறை அமைச்சர் எம். லிஜு உத்தரவிட்டுள்ளார்.

சுஹைல் வெறும் மதுபானம் மட்டுமே அருந்தினாரா? அல்லது தீவிரமான போதைப்பொருள் எதையேனும் பயன்படுத்தியுள்ளாரா? என்பதை அறிய ரத்த மாதிரிகள் உள்ளிட்டவையும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சுஹைலை மருத்துவப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்த நபர்களின் நண்பர்கள் அவரை சரமாரியாக தாக்கிய வீடியோக்களும்  இணையத்தில் வைரலாகியுள்ளன

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"