BREAKING
குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல் குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல்

இளம் தம்பதி உட்பட பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை!

இளம் தம்பதி உட்பட பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை!

2017 டிசம்பர் 11ஆம் திகதி, வாய்த்தகராறைத் தொடர்ந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு 35 வயதுடையவர் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட திருமணமான தம்பதியினருக்கும், பெண்ணின் சகோதரருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணையில், உயிரிழந்தவரின் உடலில் 21 வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்குக் காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள், சிசிரிவி காட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்த நீதிமன்றம், மூன்று குற்றவாளிகளும் பொதுவான நோக்கத்துடன் கொலையைச் செய்தமை அரசுத் தரப்பால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்தது.

குற்றவாளிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட தற்காப்பு மற்றும் ஆத்திரமூட்டல் தொடர்பான வாதங்களையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இதனையடுத்து, தண்டனைச் சட்டத்தின் 296ஆம் பிரிவின் கீழ் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூவருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"