BREAKING
புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட வந்த கனேடிய பிரதிநிதிகள் அனுமதி இன்றி திரும்பினர் கொக்குத்தொடுவாய் காணி விவகாரம்: தனியார் வயல் காணியில் உப்பளம் அமைக்கப்படவில்லை என அமைச்சர் தகவல் குருநாகலில் விகாராதிபதியின் இரட்டை வாழ்க்கை அம்பலம்: மனைவிக்கு சொகுசு கார், இருமாடி வீடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட வந்த கனேடிய பிரதிநிதிகள் அனுமதி இன்றி திரும்பினர் கொக்குத்தொடுவாய் காணி விவகாரம்: தனியார் வயல் காணியில் உப்பளம் அமைக்கப்படவில்லை என அமைச்சர் தகவல் குருநாகலில் விகாராதிபதியின் இரட்டை வாழ்க்கை அம்பலம்: மனைவிக்கு சொகுசு கார், இருமாடி வீடு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிப்பு

உலகின் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என தொல்பொருள் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதிக்கருகே அமைந்துள்ள முனா தீவில் உள்ள ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது,

சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

குகையின் சுவரில் காணப்படும் சிவப்பு நிற கை அச்சு ஓவியம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்களில் மிகவும் பழமையானதாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,

பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளின் அம்சங்களை கொண்ட மனித உருவ ஓவியங்களும் அங்கு காணப்படுகின்றன.

ஆய்வுகளின் அடிப்படையில்,

குகைச் சுவரில் கைகளை வைத்து அதன் மேல் இயற்கை நிறமிகளை ஊற்றி இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சில கை ஓவியங்களில் விரல் நுனிகள் கூர்மையாக தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த குகை ஓவியம் ஸ்பெயினில் கண்டுபிடிக்கப்பட்ட 66,700 ஆண்டுகள் பழமையான நியண்டர்தால் கை அச்சை விடவும் பழமையானது என்பதால்,

மனித வரலாறு மற்றும் கலை வளர்ச்சியைப் பற்றிய ஆய்வுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"