BREAKING
தமிழர் பகுதியில் இருவர் செய்த சட்டவிரோத செயல் இரகசியத் தகவலால் பிடிபட்ட வயோதிபர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; 23 வயது இளைஞன் மற்றும் 16 வயது சிறுமி பலி உலகின் மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி தமிழர் பகுதியில் இருவர் செய்த சட்டவிரோத செயல் இரகசியத் தகவலால் பிடிபட்ட வயோதிபர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; 23 வயது இளைஞன் மற்றும் 16 வயது சிறுமி பலி உலகின் மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கொழும்பில் சோகம்; மாடி கட்டடத்திலிருந்து தவறி விழுந்த வயது சிறுவன் உயிரிழப்பு

கொழும்பில் சோகம்; மாடி கட்டடத்திலிருந்து தவறி விழுந்த வயது சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு 09, மருதானை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த சிறுவன், குறித்த அடுக்குமாடிக் கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் குளத்திற்கு அருகில் மேலும் சில சிறுவர்களுடன் சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மேல் மாடியில் அமைந்திருந்த திறந்தவெளிப் பகுதியிலிருந்து சிறுவன் தவறி விழுந்ததாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளில் இது விபத்து என தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மருதானை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"