BREAKING
FCIDயில் ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ச ; சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை பொலிஸாரின் சோதனையில் பிடிபட்ட இளைஞன் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள் தமிழர் பகுதியில் வயோதிய குடும்பத்திற்கு அதிகாலையில் நேர்ந்த அசம்பாவிதம் முதியவரின் உயிரை பறித்த லொறி ; தீவிரமாகும் விசாரணை அடுத்த 24 மணிநேரத்தில் வலுவிழக்கும் தாழமுக்கம் ; மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு FCIDயில் ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ச ; சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை பொலிஸாரின் சோதனையில் பிடிபட்ட இளைஞன் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள் தமிழர் பகுதியில் வயோதிய குடும்பத்திற்கு அதிகாலையில் நேர்ந்த அசம்பாவிதம் முதியவரின் உயிரை பறித்த லொறி ; தீவிரமாகும் விசாரணை அடுத்த 24 மணிநேரத்தில் வலுவிழக்கும் தாழமுக்கம் ; மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக, 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான பணத்தை உரிய முறையில் வழங்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணம் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான தீர்வை பெற்றுத் தருமாறு அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுத்திட்டத்திற்கான நிலுவைப் பணத்தை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"