அநுராதபுரம், ஜயந்தி கிராம பகுதியில் நேற்று காலை அநுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது கொக்கைன், குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 690 மில்லிகிராம் கொக்கேய்ன், 23 கிராம் 600 மில்லிகிராம் குஷ் போதைப்பொருள், 16,500 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, சாலியபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவரைக் கைது செய்து அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக