BREAKING
FCIDயில் ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ச ; சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை பொலிஸாரின் சோதனையில் பிடிபட்ட இளைஞன் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள் தமிழர் பகுதியில் வயோதிய குடும்பத்திற்கு அதிகாலையில் நேர்ந்த அசம்பாவிதம் முதியவரின் உயிரை பறித்த லொறி ; தீவிரமாகும் விசாரணை அடுத்த 24 மணிநேரத்தில் வலுவிழக்கும் தாழமுக்கம் ; மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு FCIDயில் ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ச ; சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை பொலிஸாரின் சோதனையில் பிடிபட்ட இளைஞன் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள் தமிழர் பகுதியில் வயோதிய குடும்பத்திற்கு அதிகாலையில் நேர்ந்த அசம்பாவிதம் முதியவரின் உயிரை பறித்த லொறி ; தீவிரமாகும் விசாரணை அடுத்த 24 மணிநேரத்தில் வலுவிழக்கும் தாழமுக்கம் ; மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழர் பகுதியில் வயோதிய குடும்பத்திற்கு அதிகாலையில் நேர்ந்த அசம்பாவிதம்

தமிழர் பகுதியில் வயோதிய குடும்பத்திற்கு அதிகாலையில் நேர்ந்த அசம்பாவிதம்

முல்லைத்தீவு – கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகளின் தொடர் அச்சுறுத்தலால் மக்கள் மிகுந்த உயிர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலை 3.00 மணியளவில் அப்பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த காட்டு யானை, வீட்டின் சுவரை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளதுடன், அருகிலுள்ள மேலும் சில வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளது.

குறித்த வீட்டில் தனிமையில் வசிக்கும் வயோதிபக் குடும்பத்தினரின் வீட்டிற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகுந்த காட்டு யானை, யன்னலை உடைத்து அரிசிப் பைகளையும் பயன்தரு மரங்களையும் சேதப்படுத்தியிருந்த நிலையில், இன்று மீண்டும் அவ்வீட்டின் சுவரை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் இதுவரை எவரும் நேரில் வந்து பார்வையிடவில்லை எனவும், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

“யானைக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டாலோ அல்லது யானையை சுட்டு வீழ்த்தும் சம்பவம் ஏற்பட்டாலோ உடனடியாக அதிகாரிகள் வருகின்றனர்.

ஆனால், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது ஏன் அதே அளவிலான அக்கறை காட்டப்படுவதில்லை?” என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன், தம்மைப் பாதுகாக்கும் வகையில் உடனடியாக யானை வேலி அமைத்துத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன், பாதிக்கப்பட்ட மக்களிடம் நிலமையைக் கேட்டறிந்ததுடன், விரைந்து தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க உடனடியாக யானை வேலி அமைத்துத் தருமாறு கேப்பாபுலவு குடியிருப்பு மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"