கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதி, மெனிக்கும்புர சந்திக்கு அருகில் வீதி விபத்து பதிவாகியுள்ளது.
கண்டியிலிருந்து மடவலை நோக்கி பயணித்த டிப்பர் லொறி ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கட்டுகஸ்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் ஆவார்.
கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக