BREAKING

கொழும்பு சிறைகளில் தட்டம்மை நோய்

கொழும்பு சிறைகளில் தட்டம்மை நோய்

தட்டம்மை நோய் பரவல் காரணமாக கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல் சிறையில் சில கைதிகளுக்கு தட்டம்மை நோய் தொற்றியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னாயத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"