தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் ‘மூன்று முடிச்சு’ சீரியல் நடிகர் நியாஸ் கானின் பிறந்தநாள், படப்பிடிப்பு தளத்தில் சீரியல் குழுவினரால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘மூன்று முடிச்சு’ தொடர், ஆரம்பத்தில் சூர்யா – சுந்தரவல்லி என்ற தாய்–மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக நகர்ந்தது.
கதை நகர நகர, சீரியலின் மையக்கதைக்களம் சூர்யா – நந்தினி ஜோடியைச் சுற்றி மேலும் பரபரப்பாக மாறியது. தற்போது தொடரில் அடுத்தடுத்து இடம்பெறும் திருப்பங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.
தற்போதைய கதைக்களத்தில், சுரேக்கா ரஞ்சித்தின் சூழ்ச்சியால் கடத்தப்படுவதும், அந்த சம்பவத்திற்கான பழி முழுவதும் நந்தினி மீது விழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், நந்தினியின் தங்கையால் ஏற்படும் புதிய பிரச்சினைகளும் கதையில் பரபரப்பை அதிகரித்துள்ளன.
இதனால் ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களுடன் சீரியல் நகர்ந்து வருவதால், அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்தத் தொடரில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் நியாஸ் கான், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
சூர்யா கதாபாத்திரத்தின் சிறப்பம்சமாக, தன்னைச் சுற்றியுள்ளவர்களின் அணுகுமுறைக்கு ஏற்ப பதிலளிக்கும் ஒரு வலிமையான குணநலன் காட்டப்படுகிறது.
என சூர்யாவின் கதாபாத்திரம் நகர்ந்து வருவதால், இந்த வேடத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் நியாஸ் கானின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மூன்று முடிச்சு’ சீரியல் குழுவினர் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
சீரியல் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் ஒன்றாக இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், நியாஸ் கானின் ரசிகர்கள் மற்றும் ‘மூன்று முடிச்சு’ சீரியல் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்த இனிய கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக