BREAKING
தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி

நாட்களில் ரூ. கோடியை கடந்த கட்டா குஸ்தி வசூல் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் விஷ்ணு விஷால்

நாட்களில் ரூ. கோடியை கடந்த கட்டா குஸ்தி வசூல் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி 2nd ரவுண்ட்’ திரைப்படம் உலகளவில் சிறப்பான வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய முதல் பாகமான ‘கட்டா குஸ்தி’ 2022ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி கண்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்தனர்.

அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ‘கட்டா குஸ்தி 2nd ரவுண்ட்’ திரைப்படம் கடந்த ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

குடும்பம், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் கலந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வெளியான முதல் வாரத்திலேயே சிறப்பான வசூலைப் பதிவு செய்த இப்படம், தற்போது 10 நாட்களை நிறைவு செய்த நிலையில் உலகளவில் ரூ.40 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வசூல் மூலம், விஷ்ணு விஷாலின் சமீபத்திய வெற்றிப்படங்களில் ஒன்றாக ‘கட்டா குஸ்தி 2nd ரவுண்ட்’ உருவெடுத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் தொடர்ந்து உயரக்கூடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"