நாடாளுமன்றத்திற்குள் தமக்கு எதிராக அநாகரிகமான மற்றும் அவமதிப்பான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக சபாநாயகரிடம் உத்தியோகபூர்வ முறைப்பாடு செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையை நிறைவு செய்த பின்னர், தனது இருக்கையில் அமர்ந்திருந்தபோது தன்னை நோக்கி மிகவும் கேவலமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த சம்பவம் நாடாளுமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியிருக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தொடர்புடைய சிலருக்கு எதிராக ஏற்கனவே உயிர் அச்சுறுத்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், தனக்கு பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க விதிமுறைகளின் அடிப்படையில், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதே சிறப்புரிமைக் குழுவில் உறுப்பினராக இருப்பதால், விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், விசாரணை முடியும் வரை அவரை அந்தக் குழுவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மே
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக