BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

ஓகஸ்ட் ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச மாநாடு நடத்தப்படும் என உறவினர்கள் அறிவிப்பு

ஓகஸ்ட் ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச மாநாடு நடத்தப்படும் என உறவினர்கள் அறிவிப்பு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துப்படி, தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலும், நாட்டின் பல்வேறு இடங்களிலும் தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கடந்த பல தசாப்தங்களாக கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

1948ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் இதுவரை தெளிவான உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை என்றும், அதற்கான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், விசாரணை என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் உள்நாட்டு நடவடிக்கைகள் நீதியை உறுதிப்படுத்தும் வகையில் அமையவில்லை என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவருகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மாநாட்டில் உள்ளூர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"