BREAKING
சிக்கன் ஈரலா? ஆட்டு ஈரலா? உடல்நலத்திற்கு எது சிறந்தது என்று நிபுணர்கள் கூறும் விளக்கம் காகிதக் கோப்பைகளில் சூடான பானங்கள் அருந்துவது உடல்நலத்திற்கு ஆபத்தா? நிபுணர்கள் கூறும் விளக்கம் டெங்கு பரிசோதகர்களாக மாறுவேடமிட்ட பொலிஸார்; ஹெரோயின் விற்பனை சந்தேகநபர் அம்பாறையில் அதிரடியாக கைது நெடுங்கேணியில் 78 கிலோ கேரள கஞ்சாவுடன் 31 வயது இளைஞர் கைது அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சுசில் ரணசிங்க அறிவிப்பு சிக்கன் ஈரலா? ஆட்டு ஈரலா? உடல்நலத்திற்கு எது சிறந்தது என்று நிபுணர்கள் கூறும் விளக்கம் காகிதக் கோப்பைகளில் சூடான பானங்கள் அருந்துவது உடல்நலத்திற்கு ஆபத்தா? நிபுணர்கள் கூறும் விளக்கம் டெங்கு பரிசோதகர்களாக மாறுவேடமிட்ட பொலிஸார்; ஹெரோயின் விற்பனை சந்தேகநபர் அம்பாறையில் அதிரடியாக கைது நெடுங்கேணியில் 78 கிலோ கேரள கஞ்சாவுடன் 31 வயது இளைஞர் கைது அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சுசில் ரணசிங்க அறிவிப்பு

கோட்டாபய ராஜபக்சவின் வேட்புமனு தொடர்பாக அலி சப்ரி மற்றும் மகிந்த தேசப்பிரியவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கோட்டாபய ராஜபக்சவின் வேட்புமனு தொடர்பாக அலி சப்ரி மற்றும் மகிந்த தேசப்பிரியவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் சான்றுகளுடன் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டில், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 41ஆம் பிரிவின் கீழ் அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அப்போது அமெரிக்கக் குடியுரிமை கொண்டிருந்ததாகக் கூறப்படும் கோட்டாபய ராஜபக்சவுக்கு 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டவிரோதமான சலுகையும் ஆதரவும் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு முன்னர் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தகுதியற்றவர்கள் என்பதால், வேட்பாளர்களின் தகுதிகளை உறுதிப்படுத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ பொறுப்பாகும் என்றும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டுக் குடியுரிமை தொடர்பாக கேள்விக்குள்ளான வேட்பாளர்களில் நாகானந்த கொடித்துவக்கு மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இருந்ததாகவும், நாகானந்த கொடித்துவக்கு தனது பிரித்தானியக் குடியுரிமையைத் துறந்ததற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்த போதிலும், கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்ததற்கான ஏற்றுக்கொள்ளத்தக்க ஆவணத்தை சமர்ப்பிக்கவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக இருந்த பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தாக்கல் செய்ததாகக் கூறப்படும் சத்தியப்பிரமாணங்களில், கோட்டாபய ராஜபக்ச குடியுரிமையைத் துறந்ததற்கான போதுமான ஆதாரங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அலி சப்ரி சமர்ப்பித்த சத்தியப்பிரமாணத்தின் உண்மைத்தன்மையை முழுமையாக சரிபார்க்காமல் தேர்தல்கள் ஆணைக்குழு கோட்டாபய ராஜபக்சவின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாக முறைப்பாட்டாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை இரத்து செய்யப்பட்டதாகவும், அது அமெரிக்காவின் Federal Register பதிவுகள் மூலம் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"