BREAKING
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பாரம்பரிய உணவு: கும்மாயத்தின் நன்மைகள் என்ன? டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுங்கள்: பொதுமக்களுக்கு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை டிசம்பர் வரை சனி பகவானின் அருள்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் தண்டனை நிச்சயம் – அமைச்சர் ஆனந்த விஜயபால அதிரடி அறிவிப்பு குடும்பத் தகராறு விபரீதம்: தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனை தேடும் பொலிஸார் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பாரம்பரிய உணவு: கும்மாயத்தின் நன்மைகள் என்ன? டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுங்கள்: பொதுமக்களுக்கு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை டிசம்பர் வரை சனி பகவானின் அருள்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் தண்டனை நிச்சயம் – அமைச்சர் ஆனந்த விஜயபால அதிரடி அறிவிப்பு குடும்பத் தகராறு விபரீதம்: தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனை தேடும் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: 'தாயக மக்கள் கட்சி' அலுவலகத்திற்கு நள்ளிரவில் தீ வைப்பு!

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: 'தாயக மக்கள் கட்சி' அலுவலகத்திற்கு நள்ளிரவில் தீ வைப்பு!

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும், கட்சி அலுவலகமும் செயற்பட்டு வருகின்றன.

நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கட்டிடத்தின் வாயில் பகுதியில் பெற்றோல் ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தத் தீப்பரவல் காரணமாக கட்டிடத்தின் நுழைவாயில் மற்றும் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தடயவியல் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்யப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"