BREAKING
தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: டி.என்.ஏ பரிசோதனைக்காக பல்லேகம ஹேமரதன தேரரின் இரத்த மாதிரி சேகரிப்பு

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: டி.என்.ஏ பரிசோதனைக்காக பல்லேகம ஹேமரதன தேரரின் இரத்த மாதிரி சேகரிப்பு

15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அநுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரின் இரத்த மாதிரி டி.என்.ஏ பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிட்டம்புவ பொலிஸாரின் விசேட அதிகாரிகள் குழுவினர் குறித்த தேரரை கொழும்பு அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் சென்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, நிட்டம்புவ பொலிஸ் பிரிவிலுள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த சிறுமியும், அவரது காதலர் எனக் கூறப்படும் நபரும் முதலில் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கம்பஹா பொது வைத்தியசாலையின் நீதிமருத்துவ நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின் போது, குறித்த சிறுமி முன்னரும் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என அறிக்கைகள் மூலம் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் கம்பஹா பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சிறுமியிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். அந்த வாக்குமூலங்களில், தன்னை முதன்முதலில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அநுராதபுரம் பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதி என சிறுமி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தனது காதலர் மற்றும் உறவினரான மற்றொருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"