BREAKING
இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடற்தொழிலுக்காக இன்று காலை கடலுக்குச் சென்ற சிலர் குறித்த சடலத்தை முதலில் கண்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனை மற்றும் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"