BREAKING
புதன் நட்சத்திர மாற்றம்: மிதுனம், சிம்மம், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை; ஜாக்பாட் அடிக்கும் காலம் ஆரம்பம் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மத்திய வங்கி வெளியிட்ட விசேட வர்த்தமானி அமுலுக்கு வருகிறது கம்போடியா நெருக்கடியின் தாக்கம் இலங்கையில்; கடற்கரை விடுதிகள் மற்றும் குடியிருப்புகளை குறிவைக்கும் சர்வதேச இணைய மோசடி கும்பல்கள் சஹ்ரான் கும்பலுக்கு சம்பளம் வழங்கியதாக சலே மீது சரத் பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டு! தமிழ் சினிமாவின் சகாப்தம் முடிந்தது; இயக்குனர் இமயம் பாரதிராஜா 84 வயதில் காலமானார் புதன் நட்சத்திர மாற்றம்: மிதுனம், சிம்மம், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை; ஜாக்பாட் அடிக்கும் காலம் ஆரம்பம் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மத்திய வங்கி வெளியிட்ட விசேட வர்த்தமானி அமுலுக்கு வருகிறது கம்போடியா நெருக்கடியின் தாக்கம் இலங்கையில்; கடற்கரை விடுதிகள் மற்றும் குடியிருப்புகளை குறிவைக்கும் சர்வதேச இணைய மோசடி கும்பல்கள் சஹ்ரான் கும்பலுக்கு சம்பளம் வழங்கியதாக சலே மீது சரத் பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டு! தமிழ் சினிமாவின் சகாப்தம் முடிந்தது; இயக்குனர் இமயம் பாரதிராஜா 84 வயதில் காலமானார்

தமிழ் சினிமாவின் சகாப்தம் முடிந்தது; இயக்குனர் இமயம் பாரதிராஜா வயதில் காலமானார்

தமிழ் சினிமாவின் சகாப்தம் முடிந்தது; இயக்குனர் இமயம் பாரதிராஜா வயதில் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக போற்றப்படும் இயக்குனர் இமயம் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக தனது 84வது வயதில் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கே ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுவதுடன், திரையுலகினரையும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

1977ஆம் ஆண்டு வெளியான “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா, கிராமிய வாழ்க்கையையும் இயற்கை சார்ந்த கதைகளையும் தமிழ் சினிமாவில் புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தியவர். “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “அலைகள் ஓய்வதில்லை”, “முதல் மரியாதை”, “கருத்தம்மா” உள்ளிட்ட பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளன.

என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது தனித்துவமான வரவேற்பு வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அவரது அடையாளமாகவும் மாறியது. திரைப்பட இயக்குனராக மட்டுமல்லாமல், பின்னர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது உட்பட பல தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்றுள்ள பாரதிராஜா, தமிழ் திரைப்படத் துறையில் புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"