BREAKING
12 நாட்களில் ரூ.60 கோடியை கடந்த ‘பிளாஸ்ட்’ வசூல்: அர்ஜுனின் கம்பீர வெற்றி தொடர்கிறது! யாழ்ப்பாணத்தில் இரு நாட்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி; பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அவசர அறிவிப்பு ஜூன் 09 முதல் 12 வரை யாழ் மாவட்டத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அறிவிப்பு 8 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட கட்டிடம் 11 ஆண்டுகளாக முடங்கியது: பதில் கேட்கும் கொட்டகலை மக்கள் கோடி கணக்கான கருப்புப் பண பரிவர்த்தனை; இஷாரா செவ்வந்தி குறித்து CID வெளியிட்ட அதிர்ச்சி தகவல் 12 நாட்களில் ரூ.60 கோடியை கடந்த ‘பிளாஸ்ட்’ வசூல்: அர்ஜுனின் கம்பீர வெற்றி தொடர்கிறது! யாழ்ப்பாணத்தில் இரு நாட்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி; பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அவசர அறிவிப்பு ஜூன் 09 முதல் 12 வரை யாழ் மாவட்டத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அறிவிப்பு 8 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட கட்டிடம் 11 ஆண்டுகளாக முடங்கியது: பதில் கேட்கும் கொட்டகலை மக்கள் கோடி கணக்கான கருப்புப் பண பரிவர்த்தனை; இஷாரா செவ்வந்தி குறித்து CID வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் இரு நாட்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி; பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அவசர அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் இரு நாட்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி; பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அவசர அறிவிப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புத் திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் காரணமாக, குறித்த வீதி இரண்டு நாட்களுக்கு முழுமையாக மூடப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நீண்டகாலமாக மக்கள் எதிர்நோக்கியிருந்த வீதி அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய கட்டமான காப்பெட் (Carpet Road) அமைக்கும் பணிகள் ஜூன் 10 மற்றும் ஜூன் 11 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக குறித்த வீதிப்பகுதியில் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதுடன், வீதியோர வர்த்தக நிலையங்களின் முன்பாக வாகனங்களை நிறுத்துவதும் அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காப்பெட் பணிகளுக்கு முன்னதாக உயர் அழுத்த காற்றுப் பம்பிகள் மூலம் வீதி சுத்தம் செய்யப்படவுள்ளதால், எழக்கூடிய தூசி காரணமாக வர்த்தக நிலையங்கள் மற்றும் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் சுகாதார நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யப்படுவதற்காக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இறுதிக்கட்ட பணிகளுக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் நல்லூர் பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"