BREAKING
போட்டிக்குப் பின் டிராவிஸ் ஹெட்டுக்குக் கைகொடுக்க மறுத்த விராட் கோலி! மைதானத்தில் பரபரப்பு! சூர்யாவின் 'கருப்பு' பட வசூலை முறியடித்ததா மோகன்லாலின் 'திரிஷ்யம் 3'? ரெட் கார்ப்பெட்டில் நீல நிற உடையில் தேவதை போல் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்! வாகன இறக்குமதியை நிறுத்த தீர்மானிக்கவில்லை; எரிபொருள் விலையிலும் மாற்றமில்லை திருத்தணி அருகே போலி மருத்துவர் கைது! போட்டிக்குப் பின் டிராவிஸ் ஹெட்டுக்குக் கைகொடுக்க மறுத்த விராட் கோலி! மைதானத்தில் பரபரப்பு! சூர்யாவின் 'கருப்பு' பட வசூலை முறியடித்ததா மோகன்லாலின் 'திரிஷ்யம் 3'? ரெட் கார்ப்பெட்டில் நீல நிற உடையில் தேவதை போல் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்! வாகன இறக்குமதியை நிறுத்த தீர்மானிக்கவில்லை; எரிபொருள் விலையிலும் மாற்றமில்லை திருத்தணி அருகே போலி மருத்துவர் கைது!

மருந்துப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

மருந்துப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மிகவேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, நாட்டின் அரச மற்றும் தனியார் சுகாதாரத் துறைகளில் மருந்துப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய பேராபத்து காணப்படுவதாக நிபுணத்துவ மருத்துவரும் அரசியல் செயற்பாட்டாளருமான சமால் சஞ்சீவ எச்சரித்துள்ளார். டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்பை விடவும் பல மடங்கு கூடுதல் தொகையைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டின் சில பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் ஏற்கனவே ஒருசில அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள டாக்டர் சமால் சஞ்சீவ, தற்போதைய பொருளாதார நிலைமை இப்படியே நீடித்தால் கடந்த 2022ஆம் ஆண்டில் நாடு சந்தித்ததைப் போன்றதொரு மிக மோசமான மருந்துத் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படக்கூடும் எனக் கவலை வெளியிட்டுள்ளார். 


எனவே, இந்த இக்கட்டான சூழலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யவும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்போதைய நடைமுறைகளில் அரசாங்கம் உடனடியாகத் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என அவர் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"