Sri Lanka சந்தையில் கைத்தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களின் விலைகள் விரைவில் அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Smartphone உள்ளிட்ட மொபைல் சாதனங்களின் விலைகள் சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது இந்த நிலைக்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.
இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளதால், புதிய கைத்தொலைபேசிகள் மட்டுமல்லாமல் சார்ஜர்கள், திரை பாதுகாப்பு சாதனங்கள், பேட்டரிகள் மற்றும் பிற உதிரிபாகங்களின் விலைகளும் உயரக்கூடும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் புதிய மொபைல் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் விரைவாக முடிவு எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர ஸ்மார்ட்போன்களின் விலைகளில் அதிக தாக்கம் காணப்படலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக