BREAKING
கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடல்நலத்திற்கு தரும் முக்கிய நன்மைகள் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்: புகைப்படங்கள் வைரல் குஷ்புவின் மகள் திருமணத்தில் புடவையில் ஜொலித்த த்ரிஷா: புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் பரபரப்பு: போட்டியாளரின் கருத்துக்கு நடுவர் கடும் எதிர்ப்பு அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஜூன் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடல்நலத்திற்கு தரும் முக்கிய நன்மைகள் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்: புகைப்படங்கள் வைரல் குஷ்புவின் மகள் திருமணத்தில் புடவையில் ஜொலித்த த்ரிஷா: புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் பரபரப்பு: போட்டியாளரின் கருத்துக்கு நடுவர் கடும் எதிர்ப்பு அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஜூன் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு

ரூபாவை கடந்த அமெரிக்க டொலர் : இலங்கை ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி

ரூபாவை கடந்த அமெரிக்க டொலர் : இலங்கை ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி

Sri Lanka பொருளாதாரத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (21) ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 354 ரூபாவை கடந்ததாகவும், 354.03 ரூபாயாக பதிவாகியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

அதேநேரத்தில், கொள்வனவு விலை சுமார் 342.63 ரூபாயாக பதிவாகியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் பதிவான குறைந்த மதிப்புகளில் ஒன்றாகும் என பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதால், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரிசி, பருப்பு, சீனி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பால் மாவின் விலையும் விரைவில் அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என நுகர்வோர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"