BREAKING
விக்கெட்டுக்கு பிறகு ‘சீக்ரெட் நோட்’ காட்டிய ஆகாஷ் சிங் : நெகிழ்ந்த சஞ்சீவ் கோயங்கா கேன்ஸ் விழாவில் கவர்ச்சி தோற்றத்தில் கலக்கிய கல்யாணி பிரியதர்ஷன் முதல் நாளே மாஸ் காட்டிய ‘கருப்பு’ : உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் மாத்தறையில் முச்சக்கர வண்டி விபத்து : 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு சுன்னாகம் - புத்தூர் வீதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிகமாக மூடல் விக்கெட்டுக்கு பிறகு ‘சீக்ரெட் நோட்’ காட்டிய ஆகாஷ் சிங் : நெகிழ்ந்த சஞ்சீவ் கோயங்கா கேன்ஸ் விழாவில் கவர்ச்சி தோற்றத்தில் கலக்கிய கல்யாணி பிரியதர்ஷன் முதல் நாளே மாஸ் காட்டிய ‘கருப்பு’ : உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் மாத்தறையில் முச்சக்கர வண்டி விபத்து : 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு சுன்னாகம் - புத்தூர் வீதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிகமாக மூடல்

ஹுனுபிட்டிய அருகே தொடருந்து தடம் புரண்டு விபத்து

ஹுனுபிட்டிய அருகே தொடருந்து தடம் புரண்டு விபத்து
பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று தடம் புரண்டு, அதன் ஒரு பெட்டி தண்டவாளத்தில் கவிழ்ந்ததில் 12 பயணிகள் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை வனவாஸல மற்றும் ஹுனுபிட்டிய தொடருந்து நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 3.25 மணிக்கு பொல்கஹாவெலவிலிருந்து புறப்பட்ட இந்தத் தொடருந்து, விபத்து நிகழ்ந்த நேரத்தில் களுத்துறை தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த பயணிகள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான F.U. வூட்லர் தெரிவித்துள்ளார். எனினும், அவர்களில் பலத்த காயமடைந்த ஒரு பயணி மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"