BREAKING
இருமுறை மரண தண்டனை பெற்ற குற்றவாளி வெலிக்கடை சிறையில் அடைப்பு பிரசவத்திற்குப் பின் இளம் தாய் உயிரிழப்பு: நீதி கோரி கணவரின் உருக்கமான வேண்டுகோள் மீன ராசியில் வக்ர சனிபகவான்: ரிஷபம், மிதுனம், துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம் என ஜோதிட கணிப்பு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடலுக்கு தரும் 10 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் வைரலாகும் ஜேசன் சஞ்சயின் உரை; தந்தை விஜய் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் இருமுறை மரண தண்டனை பெற்ற குற்றவாளி வெலிக்கடை சிறையில் அடைப்பு பிரசவத்திற்குப் பின் இளம் தாய் உயிரிழப்பு: நீதி கோரி கணவரின் உருக்கமான வேண்டுகோள் மீன ராசியில் வக்ர சனிபகவான்: ரிஷபம், மிதுனம், துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம் என ஜோதிட கணிப்பு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடலுக்கு தரும் 10 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் வைரலாகும் ஜேசன் சஞ்சயின் உரை; தந்தை விஜய் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம்

விக்கெட்டுக்கு பிறகு சீக்ரெட் நோட் காட்டிய ஆகாஷ் சிங் : நெகிழ்ந்த சஞ்சீவ் கோயங்கா

விக்கெட்டுக்கு பிறகு சீக்ரெட் நோட் காட்டிய ஆகாஷ் சிங் : நெகிழ்ந்த சஞ்சீவ் கோயங்கா

Lucknow Super Giants அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான Akash Singh, Chennai Super Kings அணிக்கு எதிரான போட்டியில் தனது அபாரமான பந்துவீச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த சீசனில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அவர் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை சிதறடித்தார். பவர்பிளே ஓவர்களில் சிஎஸ்கே கேப்டன் Ruturaj Gaikwad மற்றும் நட்சத்திர வீரர் Sanju Samson ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் சிங், ஒவ்வொரு விக்கெட்டுக்கும் பின்னரும் தனது பாக்கெட்டில் இருந்த ஒரு காகிதத்தை ரசிகர்களிடம் காட்டி கொண்டாடினார். அந்த குறிப்பில், “#Akki on fire - Akash knows how to take wickets in T20 game” என்று எழுதப்பட்டிருந்தது. இளம் வீரரின் இந்த வித்தியாசமான கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து Sanjiv Goenka தனது எக்ஸ் தளத்தில் ஆகாஷ் சிங்கை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று இரவு 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினாய். அந்த காகிதக் குறிப்பே அனைத்தையும் சொல்லிவிட்டது. டி20 போட்டியில் எப்படி விக்கெட் எடுக்க வேண்டும் என்பதை நீ நிரூபித்துக் காட்டிவிட்டாய்” என குறிப்பிட்டுள்ளார். தனது ஆட்டம் குறித்து பேசிய Akash Singh, “ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாட மட்டும் வரக்கூடாது, ஆதிக்கம் செலுத்த வர வேண்டும். பெரிய வீரர்களின் விக்கெட்டை எடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி தனித்துவமானது” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"