BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

இலங்கையின் பிரபல வங்கியில் மில்லியன் ரூபா நிதி மோசடி வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம்

இலங்கையின் பிரபல வங்கியில் மில்லியன் ரூபா நிதி மோசடி வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம்

இலங்கையின் முன்னணி வணிக வங்கி ஒன்றில் பெரும் நிதி மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலையான வைப்பு (Fixed Deposit) கணக்கில் பணம் வைத்திருந்த ஒரு வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து, 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை அவரது அனுமதி இன்றி பல கட்டங்களாக வேறு நிதி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பரிவர்த்தனைகள், வாடிக்கையாளரின் சரியான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தப்பட்டு செய்யப்பட்டதாகவும், வங்கியின் அதே பதிவு செய்யப்பட்ட கைபேசி சாதனம் மூலமாகவே இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், வாடிக்கையாளர் கைபேசி ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என வங்கி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

வங்கி நடத்திய உள்நாட்டு விசாரணையில், தங்கள் கணினி அமைப்பில் எந்தவித தொழில்நுட்ப கோளாறும் இல்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பணம் இழந்த வாடிக்கையாளருக்கு எந்தவித முன்னறிவித்தலும் இன்றி சில வினாடிகளில் முழு தொகையும் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)யில் முறைப்பாடு செய்யுமாறு வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த நிதி இழப்புக்கு வங்கி பொறுப்பு ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம், ஆன்லைன் வங்கி பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"